நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கொரோனா விசயத்தில் பிரதமர் மோடியின் செயல்களை விமர்சித்து வந்தார். இந்நிலையில் கண்டனம் தெரிவித்து அவருக்கு கடிதமும் அனுப்பினார்.
முறையான திட்டமிடல் இல்லாமல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது – பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் கடிதம்
* அடுத்த வேளை சமைப்பதற்கு எண்ணெய் இல்லாத மக்கள் எப்படி விளக்கு ஏற்றுவார்கள்? எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் நடிகை காயத்திரி ரகுராம் கமல்ஹாசனின் செயலை விமர்சித்துள்ளார்.
இதில் அவர் எப்படி தோல்வியுற்றார்கள் என நீங்கள் ஏன் ஜிங்பிங், தப்லீகி ஜமாத் கடிதம் எழுதக்கூடாது? சட்டத்தை மதிக்காத குடிமகன்களுக்கு நீங்கள் கடிதம் எழுதம் வேண்டும், விஜய் பாஸ்கர் மற்றும் தமிழ் நாடு அரசு தோல்வியுற்றதாக கூறுகிறீர்களா, தமிழ்நாடு எம் எம் ஏக்கள், எம்பிக்களுக்கு கடிதம் எழுதுங்கள்..
உங்களுக்களுக்கு பிரச்சனை இருந்தால் மாநில அரசுக்கு கடிதம் எழுதுங்கள் என கூறியுள்ளார்.
கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1 ல் காயத்திரி போட்டியாளாராக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
Why don’t you write a letter to #Xijinping and #TabhleegiJamaat how they failed? And write a letter to irresponsible citizens who don’t obey. Are you saying @CMOTamilNadu @Vijayabaskarofl is failing? Write letter TN MLAs & MPs. if u have problem address it to the state gov first https://t.co/qlbuLk5Zll
— Gayathri Raguramm (@gayathriraguram) April 6, 2020