உலக நாடுகளை தொடர்ந்து தமிழகத்தில் நாளுக்கு நாள் கருணா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள செய்தி நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் இருக்கின்றது.
கோயம்புத்தூர் சிங்கநல்லூர் இல் இருக்கும் இஎஸ்ஐ மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் பெண் மருத்துவர் மற்றும் அவரது பத்து மாத குழந்தை, பணிப்பெண் மூவருக்கும் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
மேலும் திருப்பூரை சேர்ந்த தொழிலதிபர், அயல்நாட்டில் இருந்து கோயம்புத்தூருக்கு திரும்பிய இளம்பெண் ஆன்லைன் கரோனா வைரஸ் தொற்று இருந்துள்ளது. இந்நிலையில் இந்த ஐந்து பேரும் வைரஸ் தொட்டிலில் இருந்து மீண்டு உள்ளனர். மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட போதிலும் 5 பேரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி வைக்கும் மருத்துவர்கள், மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
சென்னைக்கு அடுத்ததாக வைரஸ் தொற்று அதிகம் இருக்கும் மாவட்டங்களில் கோயம்புத்தூர் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த நிலையில் அம் மாவட்டத்திலிருந்து 5 பேர் நலம் பெற்று வீடு திரும்பியது மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இருப்பினும் புதிதாக ஒருவருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.