வாட்சாப் ஷேரிங்க்கு ஆப்பு..!!

இணையப்பயன்பாடுகள் என்பது நம்மிடையே நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தினமும் மக்கள் அதிகளவில் பல விஷயங்களை தெரிந்து கொண்டு வருகின்றனர்.

இருப்பினும் உண்மைக்கு மாறான மற்றும் பொய்யான தகவல்கள் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இதனை அறியாத சிலரும் பொய்யான தகவலை உண்மை என நம்பி அதிகளவு பகிர்ந்து வருகின்றனர்.

இதனால் பல பிரச்சனைகள் ஏற்பட்டு வரும் நிலையில், தற்போது உலகையே அச்சுறுத்தத்திலுள்ள கரோனா வைரஸின் தாக்கமானது உலகளவில் பெரும் பிரச்சனையாக இருக்கிறது.

இந்த நிலையில், கரோனா தொடர்பான பல உண்மை தகவல் பகிரப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், பொய்யான தகவல் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இதனால் வாட்சப் நிறுவனம் தனது ஷேர் செய்யும் அமைப்பில் மாற்றம் செய்துள்ளது.

இதற்கு முன்னதாக வாட்சப் தகவலை 5 நபர்களுக்கு பகிரும் வகையில் இருந்த நிலையில், தற்போது இது குறைக்கப்பட்டு ஒரு செய்தியை ஒரு நபருக்கு மட்டுமே ஷேர் செய்யும் வசதியை மாற்றி அமைத்துள்ளது. இது தொடர்பான தகவலை Whatsapp நிறுவனம் தனது பக்கத்தில் தெரிவித்துள்ளது.