உலகில் பரவி வரும் கரோனா வைரஸ் பாதிப்பிற்கு அறிகுறிகள் முதலில் சளி காய்ச்சல் உடல் வெப்பநிலை அதிகரித்தல் போன்ற அறிகுறிகள் இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது. பின்னர் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துதொற்று இருப்பது உறுதி செய்தால் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவார்கள் என்பது தான் அனைவருக்கும் தெரிந்தது.
ஆனால் எந்த ஒரு அறிகுறியும் இன்றி திடீரென கேரள மாணவி ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக வந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வடமாநிலத்தில் இருந்து கேரளாவிற்கு வந்த மாணவி ஒருவர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வந்தார்.
அவரை 14 நாட்கள் மருத்துவர்கள் அவர்களது கண்காணிப்பில் வைத்து இருந்தனர். அந்த மாணவிக்கு வைரஸின் தொற்று அறிகுறி எதுவும் இல்லை என்பது உறுதியானது. இந்த நிலையில் நேற்று திடீரென அவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதாக பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இதனால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 14 நாட்கள் அவர்களின் கண்காணிப்பில் இருந்து எவ்வித அறிகுறியும் இன்றி ஒரே நாளில் கரோனா வைரஸ் தொற்று பரவியது குறித்து மருத்துவ உலகிற்கே புரியாத புதிராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் வைரஸ் தனது கொடூர ஆட்டத்தை காண்பிக்க ஆரம்பித்துவிட்டது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.