வீட்டில் இதை தான் செய்கிறேன்! நடிகை அதுல்யா……

இந்திய நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர். இதனால் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகை, நடிகர்கள் படப்பிடிப்பு எதுவும் இன்றி வீட்டிலே உள்ளனர்.

இந்த நிலையில் அவர்கள் வீட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதனை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில் தற்போது நடிகை அதுல்யா ரவி தனது வீட்டில் பதிவு செய்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், அவர் தானே கச்சாயம் என்ற ஒரு இனிப்பு வகை செய்துள்ளார். அதனை அவர் எப்படி செய்தார் என்பதனை ரசிகர்களுக்கு வீடியோவாக பதிவிட்டு காட்டியுள்ளார். அதனை சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களின் பார்வைக்காக வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் பேசி அவர் தனது அம்மாவின் உதவி என்று தானே இந்த இனிப்பை செய்து உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் வீடியோ முடிவில் கடைசியில் என்னையும் வேலை செய்ய வச்சுட்டாங்க என்று கூறி வீட்டில் சும்மா இருப்பதற்கு இதை செய்யலாம் என்றும் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து நடிகை அதுல்யா போலவே பல சினிமா பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் என்று அவர்கள் வீட்டில் செலவிடும் நேரத்தை பதிவாக செய்து சமூக வலைத்தளத்தில் வாயிலாக பகிர்ந்து வருகின்றனர்.