கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகின் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டில் வருகிற 24ம் திகதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீப்பர் நதியில் வாலிபர் ஒருவர் உல்லாசமாக குளியல் போட்டுள்ளார்.
இதுகுறித்து பொலிசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் விரைந்து வந்த அதிகாரிகள், அந்த வாலிபரை கரைக்கு வரும்படி எச்சரித்தனர். அவர் சுமார் அரைமணி நேரம் உல்லாச குளியல் போட்ட பின் கரைக்கு திரும்பினார்.
அதன்பின்னர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர், இந்த வழக்கை நீதிமன்றம் 15ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.