தமிழ் சினிமாவின் தளபதி என்று அனைவராலும் அழைக்க படுபவர் நடிகர் விஜய், பிகில் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
எனவே இவரின் அடுத்த திரைப்படத்தை இயக்க போவது யார் என தற்போது வரை தெரியவில்லை, இதில் சில முக்கிய நடிகர் விஜய்யிடம் கதை கூறியிருப்பதாக தெரிகிறது.
மேலும், கூறப்படும் இயக்குனர்களில் மிகவும் இயக்குனர் மகிழ் திருமேனியும் ஒருவர், இவர் தடம் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதியுடன் இணைவார் என எதிர்பார்க்க படுகிறது.
இந்நிலையில் இவர் நடிகர் விஜய் குறித்து நெகிழ்ச்சியாக ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது “நான் அவருடைய பேன், எம். ஜி. ஆர் மற்றும் ரஜினியை போலவே இவரும் ஒரு கதாபாத்திரத்தை தன்வயப்படுத்தி கொள்வர். இவர் ஒரு மகா கலைஞன்” என கூறியுள்ளார்.