குட்டையாக இருக்கும் உங்கள் குழந்தை உயரமாக வளர என்ன செய்யலாம் தெரியுமா ?

தம் குழந்தைகள் உயரமாக வளர வேண்டும் என்ற ஆசை ஒவ்வொரு பெற்றோருக்கும் உள்ளது.

உயரம் பாரம்பரியத்தினால் தீர்மானிக்கப்படுகிறது. கூர்ந்து நோக்கினால் தந்தையைப் போன்ற உயரத்தை ஆண் பிள்ளைகளும் தாயை போன்ற உயரத்தை பெண் பிள்ளைகளும் அடைகின்றனர்.

தந்தை உயரமாக இருக்கும் சமயத்தில் மகன்கள் அதைவிட சற்று உயரமாக இருப்பார்கள். தாய் குட்டையாக இருந்தால் மகள் அதைப் போன்றே குட்டையாக வளர்வார்கள்.

மரபணுக்களால் ஒருவரின் உயரம் தீர்மானிக்கப்பட்டாலும் நம் முயற்சிகளின் மூலமும் குழந்தைகளின் உயரத்தை அதிகப்படுத்தலாம்.

உயரத்தை அதிகப்படுத்துவதில் சத்தான உணவு வகைகளுக்கு முக்கிய பங்கு உண்டு. மீன் எண்ணை, வைட்டமின் ஏ மற்றும் டி கொண்ட மாத்திரைகள், புரோட்டின் நிறைந்த எல்லா உணவுப் பொருட்களும் குழந்தைகளுக்கு உயரத்தை அதிகப்படுத்துகின்றன.

புரோட்டின் நிறைந்த உணவுப் பொருட்களை மட்டும் கொடுக்காமல் அதன் கூட சில உடற்பயிற்சிகள் மேற்கொண்டாலும் குழந்தைகள் உயரமாக வளருவார்கள்.

என்னென்ன பயிற்சிகள் செய்தால் குழந்தைகள் வேகமாக வளர்வார்கள் என்பதை பார்ப்போம்:

  • நீச்சல் பயிற்சியில் ஈடுப்படும் போது உங்கள் உடல் மொத்தமும் நன்கு விரியும். இது உங்கள் குழந்தைகள் சீராக உயரமாக வளர நீச்சல் பயிற்சி உதவும்.
  • கீழேப் படுத்து, உங்கள் இடுப்பை மட்டும் உயர்த்த வேண்டும். உங்கள் இடுப்பை உயர்த்தி 20-30 வினாடிகள் அதே நிலையில் வைத்திருக்க வேண்டும். இந்த பயிற்சி தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் குழந்தைகளின் உயரம் கொஞ்சம் அதிகரிக்கும்.
    • தினமும் உங்கள் குழந்தை ஸ்கிப்பிங்கை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பதுடன் மட்டுமல்லாமல் உயரமும் அதிகமாகும்.
    • நிலத்தில் படுத்து உங்கள் கால்களை மேல் நோக்கி உயர்த்த வேண்டும். இது உங்கள் இடுப்பு பகுதியையும், கால் பகுதியையும் நன்கு ஸ்ட்ரெச் செய்யும். கொஞ்சம் கடினம் தான். இருந்தாலும் தினமும் செய்து வந்தால் உங்கள் குழந்தைகள் சீராகவும், உயரமாகவும் வளர்வார்கள்.
    • தரையில் படுத்து, உங்கள் கால்களை உங்கள் தலைக்கு பின் தசையில் உயர்த்தி தரையை தொடும் படி செய்ய வேண்டும். இந்த பயிற்சி செய்தால் உங்கள் குழந்தைகளின் இடுப்பு, தண்டுவடம், மற்றும் கால்கள் நன்று ஸ்ட்ரெச் ஆக மாறும். இதனால், உங்கள் குழந்தை சீரான முறையில் உயரமாக வளர முடியும்.