தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிரும். இதைதான் நாம் பொடுகு என்கிறோம்.
இது வறண்ட சருமம், ஹார்மோன்களின் அளவில் ஏற்படும் மாறுபாடு, பூஞ்சை போன்ற நுண்ணுயிரித் தொற்றுகள், மனஅழுத்தம், முறையற்ற உணவுப் பழக்கம், தலையைச் சுத்தமாகப் பராமரிக்காதது போன்றவை பொடுகுப் பிரச்னை உருவாக முக்கியக் காரணங்கள்.
இதனை தடுக்க எலுமிச்சை உதவிபுரிகின்றது. ஏனெனில் எலுமிச்சை சாறில் இருக்கும் அமிலதன்மை தலைமுடியின் pH அளவை சமன் செய்ய உதவுகிறது.
அந்தவகையில் இதிலிருந்து விடுபட எலுமிச்சையை எப்படி யூஸ் பண்ணலாம் என இங்கு பார்ப்போம்.
- 1-2 ஸ்பூன் எலுமிச்சை சாறை எடுத்து தலையில் தடவி ஊற விடவும். 1 மணி நேரம் கழித்து தலையை அலசவும். தினமும் இதை செய்து வருவதால் பொடுகு மறைந்து தலை முடியும் பளபளப்பாக இருக்கும்.
- ஒரு பங்கு எலுமிச்சை சாறுடன் 2 பங்கு பூண்டு அல்லது சந்தனஎண்ணெய்யை சேர்த்து சிறிதளவு தேன் சேர்த்து பயன்படுத்தலாம்.
- எலுமிச்சை, தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யவும். எலுமிச்சை ஹேர் ஸ்கிரப்பை முயற்சிக்கவும். எலுமிச்சை சாறு , தண்ணீர் கொண்டு ரின்ஸ் செய்யவும்
- வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் 2 ஸ்பூன் எலுமிச்சை சாற்றை கலக்கவும். இந்த கலவை கொண்டு கூந்தலை 10 நிமிடம் மசாஜ் செய்து 15 நிமிடங்கள் காத்திருக்கவும். பின்னர் பொடுகு எதிர்ப்பு ஷாம்பு கொண்டு கூந்தலை அலசவும்.
- இரண்டு ஸ்பூன் கடல் உப்பு, பாதி எலுமிச்சையில் இருந்து எடுத்த சாறு மற்றும் 23 ஸ்பூன் ஆலிவ் ஆயில் கொண்டு ஹேர் ஸ்கிரப் தயார் செய்யவும்.
- 8 முதல் 10 நிமிடம் வரை மென்மையான உச்சந்தலையை ஸ்கிரப் செய்து பின்னர் ஷாம்பு கொண்டு குளிக்கவும். பொடுகு இல்லாத கூந்தல் பெற வாரந்தோறும் இவ்வாறு செய்யவும்.