பிரித்தானியா தொடர்பில் லண்டன் மேயர் விடுத்துள்ள எச்சரிக்கை

கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை தளர்த்தும் நிலையில் பிரித்தானியா இல்லை என லண்டன் மேயர் சாதிக் கான் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் கொரோனாவின் மையப்பகுதியாக இருக்கும் லண்டனில் செவ்வாய்க்கிழமை மட்டும் 224 பேர் பலியாகியுள்ளனர்.

பிரித்தானியா தலைநகர் லண்டனில் கொரோனாவால் இதுவரை 8 பேருந்து தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

நான் நிபுணர்களுடன் தவறாமல் பேசிவருகிறேன், பிரித்தானியாவில் வைரஸின் மிக மோசமான பகுதியாக இருக்கும் உச்சத்தை இன்னும் ஒன்றரை வாரத்தில் எட்டும் என்று நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம்.

தற்போதும் தினசரி அதிகமான மக்கள் உயிரிழப்பதை கண்டு நான் அஞ்சுகிறேன்.

செய்யக்கூடாது என தெரிந்தும் பலர் வேலைக்கு செல்ல வீடுகளை விட்டு வெளியேறுகின்றனர். அத்தியாவசிய தொழிலாளி யார் என்பதில் தெளிவு இல்லை என தான் நினைப்பதாக சாதிக் காம் கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் தற்போது வரை கொரோனாவுக்கு 6,159 பேர் பலியாகியுள்ளனர், 55,242 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.