கொரோனா கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கொலை வழக்கு..!

கொரோனா இறப்பு எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளை கடைபிடிக்கத் தவறுபவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படும் என துனிசியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனாவால் தற்போது வரை உலகளவில் 83,257 பேர் உயிரிழந்துள்ளனர், 14,45,912 பேருக்கு நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த ஊரடங்கு உட்பட கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளன.

இந்நிலையில், பொறுப்பற்ற முறையில் செயல்படுவதன் மூலம் வைரஸை பரப்பும் மக்கள் படுகொலை குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வார்கள் என்று துனிசியா உள்துறை அமைச்சர் கூறினார்.

பிற நாடுகளும் தொற்றுநோய்களுக்கு மத்தியில் கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளை அறிவித்துள்ளன.

மற்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறியதன் விளைவாக மக்கள் இறக்கும் வழக்குகளில் கடந்த வாரம் ஏழு ஆண்டு சிறைத் தண்டனையை அறிமுகப்படுத்தியது ரஷ்யா.

சிங்கப்பூரில், உறுதிப்படுத்தப்பட்ட அல்லது சந்தேகிக்கப்பட்ட கொரோனா உள்ள எவரும் கட்டுப்பாடுகளை மீறினால் 10,000 டொலர் அபராதம் மற்றும் ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம், மீண்டும் மீண்டும் மீறுபவர்களுக்கு அதிக அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.