கரோனா வைரஸ் தமிழகம் முழுவதும் அதிதீவிரமாக பரவி வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னையில் உள்ள நீலாங்கரை பகுதியில் அமைந்துள்ள பனையூரில் நடிகர் ரியாஸ்கான் (வயது 47) நடித்து வருகிறார்.
இவர் அப்பகுதியில் காலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்து கொண்டு இருந்துள்ளார். இந்த நேரத்தில், பெண் உட்பட 5 பேர் கொண்ட கும்பல் கூட்டமாக சென்றுள்ளனர். இவர்களை கண்ட நடிகர் ரியாஸ்கான், கரோனா வைரஸை தடுக்க அரசு ஊரடங்கு போட்டுள்ளது குறித்து கூறியுள்ளார்.
மேலும், அரசு உத்தரவை மீறி கும்பலாக செல்ல கூடாது என்று அறிவுறுத்தியதில், இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தக்கும்பலை சார்ந்த நபரொருவர் ரியாஸ்கானை அடித்து உதைத்துள்ளனர்.
இதனால் காயமடைந்த நடிகர் ரியாஸ்கான் அங்குள்ள கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவரது புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் திரைஉலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.