கூகுளிற்கு வேண்டுகோளை ஏற்று அனுமதி வழங்கியது FCC

அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளுக்கு இடையில் கடலுக்கு கீழாக தொலைத்தொடர்பு கேபிள்களை அமைப்பதற்காக கூகுள் அனுமதி கேட்டிருந்தது.

இதற்கு Federal Communications Commission (FCC) தற்போது அனுமதி வழங்கியுள்ளது.

ஏனைய முறைகளில் தொலைத்தொடர்பு கேபிள்களை அமைப்பதற்கு அதிக செலவாகும் என கூகுள் நிறுவனம் தெரிவித்திருந்தது.

இக் கருத்தினை ஏற்றுக்கொண்ட நிலையிலேயே கடலுக்கு கீழாக கேபிள்களை அமைக்க FCC அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி அமெரிக்கா மற்றும் தாய்வானுக்கு இடையில் சுமார் 8,000 கிலோ மீற்றர்கள் வரை நீளம் உடைய கேபிள் அமைக்கப்படவுள்ளது.

இத் திட்டத்திற்கு பேஸ்புக் நிறுவனமும் நிதிப்பங்களிப்பு செய்யவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.