Zoom அப்பிளிக்கேஷனுக்கு கட்டுப்பாடுகள்..!!

Skype போன்று வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புக்களை இணைய இணைப்பின் ஊடாக ஏற்படுத்தக்கூடிய மற்றுமொரு அப்பிளிக்கேஷனே Zoom ஆகும்.

அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த அப்பிளிக்கேஷன் ஆனது மிகவும் பிரபல்யமாகி வருகின்றது.

கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக வீடுகளில் தங்கியுள்ள மக்கள் தம் உறவுகளுடன் உரையாடுவதற்கு இந்த அப்பிளிக்கேஷனையே தற்போது அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஜேர்மனியின் வெளிநாட்டு அமைச்சு குறித்த அப்பிளிக்கேஷனை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதில் காணப்படும் பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாகவே இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இரகசிய உரையாடல்களுக்கு குறித்த அப்பிளிக்கேஷனை பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.