பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல் நிலை குறித்து முக்கிய அறிவிப்பு!

கொரோனா வைரஸ் காரணமாக சிகிச்சை பெற்று வந்த போரிஸ் ஜான்சன் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து மாற்றப்பட்டுவிட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரித்தானிய பிரதமரான போரிஸ் ஜான்சன் கொரோனா வைரஸின் தொடர் அறிகுறிகளை 10 நாட்களுக்கு மேல் கொண்டிருந்ததால், அவர் உடனடியாக லண்டனில் இருக்கும் St Thomas மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டார்.

அங்கு கொண்டு வரப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், திடீரென்று அவசர சிகிச்சை பிரிவில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக உலகின் பல்வேறு தலைவர்களும் போரிஸ் ஜான்சன் விரைவில் நலம் பெற்று திரும்ப வேண்டும் என்று கடிதம் அனுப்பியிருந்தனர்.

இந்நிலையில், Downing Street 10, இன்று மாலை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து போரிஸ் ஜான்சன் சாதரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இருப்பினும் அவர் மருத்துவமனையில், தொடர் கண்காணிப்பில் இருப்பார் என்று அறிவித்துள்ளது.

மேலும், செய்தி தொடர்பாளர் ஒருவர், போரிஸ் தற்போது நல்ல மன நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.