அஜித் இன்று சினிமாவில் பெரும் உயரத்தை அடைந்துள்ளதன் பின்னணியை உற்று நோக்கினால் சோதனையான அவரின் வாழ்க்கை போராட்டங்களும், சாதனைகளும் ஆழப்பதிந்து நிற்கிறது.
அவர் அவ்வளவு தான், இனி அவருக்கு சினிமா வாழ்க்கை உண்டா என சிலர் விமர்சிக்கும் அளவிற்கு சில சோதனையான காலகட்டங்கள் அவரை படுக்கையில் கிடத்திப்போட்ட பின்னும் அவர் தன்னம்பிக்கையால் எழுந்து வந்து மீண்டும் பலரும் மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு முன்னேறி வந்தார்.
இன்று அவரை இயக்குவதற்காக பல பட வாய்ப்புகளுக்காக இயக்குனர்கள் காத்திருக்கிறார்கள். அதே வேளையில் அஜித் நடிக்காமல் விட்ட சில வாய்ப்புகள் மற்ற ஹீரோக்களுக்கு சூப்பர் ஹிட்டாய் அமைந்தன.
அது போல மோகன் ராஜா இயக்கத்தில் வெளியாகி ஹிட்டான படம் தனி ஒருவன். இதில் அரவிந்த் சாமி நடித்திருந்த சித்தார்த் அபிமன்யூ வேடம் அஜித்துக்காக உருவாக்கப்பட்டதாம்.
மேலும் கன்னட நடிகர் சுதீப், தெலுங்கு நடிகர் ராணா ஆகியோரின் பெயர்களும் அப்போது இந்த கதாபாத்திரத்திற்கு பரிசீலிக்கப்பட்டதாம்.
அஜித் நடித்தால் நன்றாக இருக்கும், ஆனால் அது நடைபெறவில்லை என இயக்குனட்ர் மோகன் ராஜா கூறி வருத்தப்பட்டுள்ளார்.
இப்படத்தை மோகன் ராஜா தன் தம்பியான நடிகர் ஜெயம் ரவி, நயன்தாரா ஆகியோரை கொண்டு 2015 ல் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இப்படம் பல வருடங்களுக்கு பின் சினிமாவுக்கு வந்த அரவிந்த் சாமிக்கு ரீ எண்ட்ரியாக அமைந்தது.