இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..

உலகையே உலுக்கி வரும் கோவிட் 19 வைரஸ் இதுவரை 16 லட்சத்து 97 ஆயிரத்து 533 பேருக்கு பரவி உள்ளது. உலகமுழுவதும் இதுவரை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு 102,696 பலியாகியுள்ளனர்.

சீனாவில் கண்டறியப்பட்ட கோவிட் 19 வைரஸ் தற்போது அமெரிக்காவில் தன் கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறது. தற்போது நிலவரப்படி நம் நாட்டில் 5 லட்சத்து 2 ஆயிரத்து 49 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,447அக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 206லிருந்து 239ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 516லிருந்து 643ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.