அமெரிக்காவில் ஒரே நாளில் 2037 பேர் பலி!!

உலகையே உலுக்கி வரும் கோவிட் 19 வைரஸ் இதுவரை 16 லட்சத்து 97 ஆயிரத்து 533 பேருக்கு பரவி உள்ளது. உலகமுழுவதும் இதுவரை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு 102,696 பலியாகியுள்ளனர்.

சீனாவில் கண்டறியப்பட்ட கோவிட் 19 வைரஸ் தற்போது அமெரிக்காவில் தன் கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறது. தற்போது நிலவரப்படி நம் நாட்டில் 5 லட்சத்து 2 ஆயிரத்து 49 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 33 ஆயிரத்து 483 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அந்நாட்டில் அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 2037 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு பலியாகியுள்ளனர். தற்போது அமெரிக்காவில் பலியானவர்களின் எண்ணிக்கை 18719 ஆக அதிகரித்துள்ளது.