தமிழ் திரையுலகம் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை தமன்னா. இவர் பல படங்களில் நடித்திருந்தாலும், பாகுபலி படத்திற்கு பின்னர் பெரும்பாலும் பேசப்படும் நடிகைகளில் ஒருவராக வளர்த்துள்ளார். இவர் தற்போது பாலிவுட் திரையுலகில் அதிகளவு கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில், கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ள நிலையில், பிரபலங்கள் தங்களின் இல்லத்தில் செய்வதை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
தற்போது நடிகை தமன்னா வீட்டில் இருந்தவாறே உடற்பயிற்சியாளர் உதவியுடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோ காட்சிகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது தொடர்பான விடியோக்காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.