இணையத்தில் பரவும் தனது மோசமான புகைப்படத்தால் ஆத்திரமடைந்த…. நடிகை அனுபமா பரமேஸ்வரன்..

மலையாளத்தில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம், திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

அதன்பின் தெலுங்கில் கவனம் செலுத்திய அனுபமா, அங்கு முன்னணி நடிகையாக வலம் வருகிறார், தமிழ் கோடி திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.

மேலும், தற்போது இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் நடிகர் அதர்வா உடன் தள்ளி போகாதே, திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பேஸ் மார்பிங் மூலம் மாற்றப்பட்ட இவரின் புகைப்படம் ஒன்றை அவரின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டு “இது போய்யானா புகைப்படம், எப்படி இது போன்ற தேவையில்லாத செயல்களை நேரம் ஒதுக்கி செய்கிறீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.