தற்போது உலக நாடுகளில் உள்ள நிலமையில் Zoom அப்பிளிக்கேஷன் ஆனது தொடர்பாடலை ஏற்படுத்துவதற்கு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்துள்ளது.
இந்நிலையில் பேஸ்புக் நிறுவனத்தில் ஏற்கணவே பணியாற்றியிருந்த Alex Stamos என்பவரை பணிக்கு அமர்த்தியுள்ளது.
பேஸ்புக் நிறுவனத்தில் தரவுப் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றி பின்னர் பணியிலிருந்து விலகியிருந்தார்.
இவ்வாறான நிலையில் அதே பணிக்கு அவரை Zoom நிறுவனம் உள்வாங்கியுள்ளது.
இந்த அப்பிளிக்கேஷனை ஒன்லைன் மூலம் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் தற்போது அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
எனினும் இந்த அப்பிளிக்கேஷனில் பாதுகாப்பு குறைபாடு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
அதாவது பயனர்களின் கடவுச்சொற்களை திருடப்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.