கூகுள் மற்றும் பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் தமது இணையத்தளங்களில் COVID-19 தொடர்பிலான தகவல்களை பயனர்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய வழிவகைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வரிசையில் தற்போது அமேஷான் நிறுவனமும் இணைந்துள்ளது.
அதாவது அமேஷான் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அலெக்ஸா சாதனத்தில் இவ் வசதி தரப்பட்டுள்ளது.
இச் சாதனத்திடம் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பிலான அறிகுறிகளை கேட்டால் பட்டியல் படுத்தி தெரிவிக்கக்கூடியதாக இருக்கின்றது.
எனவே “Alexa, what do I do if I think I have coronavirus?”, Alexa, how do I know if I have coronavirus?” போன்ற கேள்விகளை கேட்பதன் மூலம் அலக்ஸால சாதனத்திடமிருந்து பதில்களை பெற்றுக்கொள்ள முடியும்.
அதேபோன்று 20 செக்கன்கள் வரையில் கைகளை கழுவுதற்கும் அலக்ஸா சாதனம் உதவுகின்றது.
இதற்காக 20 செக்கன் பாடல் ஒன்றினை பாடுமாறு அலக்ஸாவிடம் கேட்கும்போது பொருத்தமான பாடலை பிளே செய்கின்றது.
பாடல் ஆரம்பித்து முடியும்வரை கைகளை கழுவினால் போதும்.