மீண்டும் ஒரு திரில்லர் கதைக்களத்தில் விஷ்ணு விஷால்..!!

தமிழில் வெளிவந்த வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால்.

இதன்பின் ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

ராட்சசன் படம் மிக சிறந்த திரில்லர் கதைககளம் கொண்டு மிக பெரிய வெற்றியை விஷ்ணுவிற்கு தேடி தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதனை போலவே தற்போது மீண்டும் மற்றொரு திரில்லர் கதைக்களம் கொண்ட, தான் நடித்திருக்கும் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.

மேலும் அப்படத்தின் டைட்டில் மாலை 4 மணிக்கு வெளிவரும் என்றும் அறிவித்துள்ளார்.