சர்வதேச விண்வெளி வீரர்கள் தினம்:
மனித விண்வெளி பயணத்திற்கான சர்வதேச தினத்தை உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஏப்ரல் 12ஆம் தேதி சர்வதேச விண்வெளி வீரர்கள் தினமாக (international day of human ) அனுசரிக்கப்படுகிறது.
இத்தினம் கொண்டாடுவதற்கு ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றி, ரஷ்யாவினால் இதற்கான முன்மொழிவு கொண்டு வரப்பட்டது. இத்தினம் அனுசரிக்கப்படுவதற்கான காரணம், விண்வெளிக்கு பயணித்த முதலாவது மனிதனின் விண்வெளி பயணத்தை நினைவுக்கூறுவதற்காக தான்.
ரஷ்யாவைச் சேர்ந்த யூரி ககாரின் 1961ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி வஸ்டொக்-1 விண்கலத்தில் பயணம் செய்து 108 நிமிடங்கள் பூமியைச் சுற்றி வந்து பாதுகாப்பாக தரையிறங்கினார். யூரி ககாரின் நினைவாக ரஷ்யாவில் ஏப்ரல் 12ஆம் தேதி சர்வதேச விண்வெளி வீரர்கள் தின கொண்டாட்டம் ஆரம்பித்தது. அது இப்போது உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.