கடந்த டிசம்பர் 2019ல் சீனாவின் வுகான் நகரில் உருவாகி உலகத்தையே ஆட்டிப்படைத்து வரும் கொரானா நோய் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்தை நெருங்கி வருகிறது.
மேலும், இந்த வைரஸ்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டிவிட்டது. நோய்களை குணப்படுத்தும் எந்த ஒரு மருந்தும் மற்றும் சிகிச்சையும் இதுவரை கண்டுபிடிக்காததனால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் உலக அளவில் நிலவி வருகிறது.
இந்த சூழ்நிலையில் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இந்த வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி கண்டுபிடித்து அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என இங்கிலாந்து நாட்டை சார்ந்த பேராசிரியர் ஒருவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டில் ஆக்ஸ்போர்டு பல்கலைகழக பேராசிரியர் சாரா கில்பர்ட் என்பவரின் தலைமையில் இந்த வைரஸ்க்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் ஒரு குழு ஈடுபட்டு வருகிறது. இந்த குழு வைரஸுக்கு எதிரான மருந்தை கிட்டத்தட்ட நெருங்கி விட்டதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், பேராசிரியர் சரத் பேட்டி ஒன்றில் இலையுதிர் காலத்தில் இந்த குழுவின் முன்னேற்றங்கள் மற்றும் கொரோனா நோய் தொற்றுக்கான தடுப்பு ஊசியை கண்டுபிடித்தல் ஆகியவற்றில் முன்னேற்றம் அடையும் என்றும், குறிப்பாக வரும் செப்டம்பர் மாதத்திற்குள் அந்த மருந்து பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்றும்,
அடுத்த சில நாட்களில் தடுப்பூசியின் மனித பரிசோதனையை தொடங்கிவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.