ஸ்டன்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் குழு ஒன்று ஸ்மார்ட் மலசலகூடத்தின் மாதிரையினை உருவாக்கியுள்ளது.
இதில் கமெராக்கள் மற்றும் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி திரையுடன் கூடிய இருக்கை (Stool) ஒன்றும் உள்ளடக்கப்பட்டிருக்கும்.
இதில் Analprint எனும் தொழில்நுட்பம் மூலம் நோய்கள் மற்றும் தொற்றுக்களை கண்டறிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இதன் உதவியுடன் குடல் நோய்களை கண்டறிதல், சிறுநீரகக்கோளாறு, சுரப்பிகளில் ஏற்படும் புற்றுநோய் என்பவற்றினையும் கண்டறிய முடியும்.
எவ்வாறெனினும் இந்த தொழில்நுட்பம் மக்கள் மத்தியில் எடுபடுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.