சாம்சுங் நிறுவனத்தின் Galaxy Note 20, Fold 2 கைப்பேசிகள் எப்போது அறிமுகமாகின்றது தெரியுமா?

சாம்சுங் நிறுவனமானது கடந்த வருடம் Galaxy 20 கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தமை தெரிந்ததே.

இப்படியிருக்கையில் இவ் வருடம் Galaxy Note 20 கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

அதுமாத்திரமன்றி ஏற்கணவே அறிமுகம் செய்து சிறந்த வரவேற்பினைப் பெற்ற Galaxy Fold கைப்பேசியின் மற்றுமொரு மொடலை அறிமுகம் செய்யவுள்ளது.

இவ் இரு கைப்பேசிகளும் எதிரவரும் ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்படும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலானது The Korea Herald என்ற பத்திரிகையில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குறித்த கைப்பேசிகளின் சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.