கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தாக்கம் உச்சமடையும்போது நோயாளிகள் மூச்சு திணறியே மரணமடைகின்றனர்.
எனவே இவர்களுக்கு உதவுவதற்காக ஏற்கணவே வென்டிலேட்டர் எனப்படும் சாதனம் பயன்படுத்தப்படுகின்றது.
எனினும் இது வினைத்திறன் குறைவாக இருக்கின்றமையினால் தற்போது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினைக் கொண்ட புதிய சாதனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
Artificial Manual Breathing Unit (AMBU) என அழைக்கப்படும் இப் புதிய சுவாச சாதனத்தினை மேற்கு வங்காளத்தின் Durgapur பகுதியில் உள்ள National Institute of Technology (NIT) நிறுவனத்தில் உருவாக்கியுள்ளனர்.
இதற்கான பரீட்சிப்புக்களும் பாண்டித்தியம் பெற்ற வைத்தியர்கள் முன்னிலையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் இது ஒரு இலகுபடுத்தப்பட்ட வென்டிலேட்டரை போன்று செயற்படுவதுடன் தேவைக்கு ஏற்ப தானியங்கி முறையில் ஒட்சிசனை வழங்கக்கூடியதாக இருக்கின்றமை சிறப்பம்சமாகும்.