வீடியோ கான்பரன்ஸிங் அப்பிளிக்கேஷனான Zoom ஆனது தற்போது உலகளவில் மிகவும் பிரபல்யம் பெற்று விளங்குகின்றது.
அண்மையில் சில சர்ச்சைகள் இந்த அப்பிளிக்கேஷனுக்கு எதிராக காணப்பட்டபோதிலும் தொடர்ந்தும் ஸ்கைப் அப்பிளிக்கேஷனுக்கு சவாலாக விளங்கிவருகின்றது.
அதாவது லொக்டவுனில் முடங்கியுள்ள உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் உரையாடுவதற்கு பல மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் பின்னர் கல்விச் செயற்பாட்டிலும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தற்போது மரணச் சடங்குகள், நினைவு தினங்கள் போன்றவற்றினை நேரடி ஒளிபரப்பு செய்யவும் Zoom அப்பிளிக்கேஷனை மக்கள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
Zoom அப்பிளிக்கேஷன் ஆனது ஒரே நேரத்தில் 500 வரையானவர்களை வீடியோ கான்பரன்ஸிங்கில் இணைக்கக்கூடியதாக இருப்பதே இவ்வாறு பிரபல்யம் அடைவதற்கான காரணம் ஆகும்.