கடந்த வருடம் 5G கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது குறித்த கைப்பேசி விற்பனையானது சூடுபிடித்து வருகின்றது.
தற்போதுள்ள நிலமையில் பல்வேறு நாடுகளில் ஸ்மார்ட் கைப்பேசி விற்பனை சரிவை சந்தித்துள்ளது.
ஆனால் தென்கொரியாவில் 5G கைப்பேசி விற்பனையானது புதிய சரித்திரம் படைத்துள்ளது.
அதாவது இந்த வருட ஆரம்பத்திலிருந்து இதுவரை அங்கு சுமார் 8.4 மில்லியன் 5G கைப்பேசிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை Counterpoint எனும் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதேவேளை இந்த வருடத்தில் அங்கு மொத்த கைப்பேசி விற்பனையில் 48 சதவீதம் 5G கைப்பேசி விற்பனை இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
எனினும் இதுவரையான காலப்பகுதியில் 28 சதவீதத்தினை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவ் வருட இறுதிக்குள் 48 சதவீதத்திற்கும் அதிகமாக 5G கைப்பேசிகள் விற்பனை செய்யப்படலாம் என நம்பப்படுகின்றது.