தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான சரத்குமாரின் மகள் நடிகை வரலட்சுமி தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
போடா போடி படத்தில் அறிமுகமான இவர் அதன்பின்னர் பல்வேறு படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
பின்னர் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்திலும், விஷால் நடிப்பில் வெளியான சண்டைக்கோழி படத்திலும் வில்லியாக நடித்து அசத்தி இருந்தார்.
இந்த இரு கதாபாத்திரமும் ரசிகர்கள் அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டது. அதில் உடல் எடை அதிகரித்து இருந்தார். ரசிகர்கள் பலரும் அவரின் எடை பற்றி கிண்டல் செய்திருந்தனர்.
அதன் பின்னர் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டிருந்தார். இந்நிலையில் தற்போது வரலட்சுமி சரத்குமார் தனது ஷூட்டிங்கை ரொம்பவும் மிஸ் பண்ணுவதாக கூறி இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தினை வெளியிட்டிருந்தார்.
அதில் அடையாளம் தெரியாத அளவு எடையை குறைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.