இந்த வயசுலயும் இப்படி ஒரு ஆட்டமா?.. அரண்மனை கிளி சீரியல் நாயகி செம்ம குத்தாட்டம்..

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் இடம் பெற்றுள்ள வாத்தி கமிங் பாடலுக்கு நடிகை பிரகதி தனது மகனுடன் சேர்ந்து வேட்டியை மடித்துக் கட்டி கொண்டு பயங்கரமான ஆட்டத்தை ஆடியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் பரவி வருகிறது.

நடிகை பிரகதி என்பவர் பாக்கியராஜ் நடித்த வீட்ல விசேஷங்க படத்தில் நடிதுள்ளார். அதன் பிறகு அவர் நிறைய தெலுங்கு படங்களில் நடித்தும் வந்தார். தற்போது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அரண்மனைக்கிளி போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சினிமா நடிகர்கள், டிவி சீரியல் நடிகர்கள் என பலரும் மாஸ்டர் படத்தின் வாத்தி கமிங் பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ பதிவு செய்து தங்கள் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டு கவனம் பெற்று வருகின்றனர்.

அந்த வகையில், நடிகை பிரகதியும் அவரது மகனும் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு வாத்தி கமிங் பாடலுக்கு செம குத்து டான்ஸ் மாஸாக ஆடியுள்ளனர். அந்த டான்ஸை வீடியோவாக பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Quarantine tales #vaathicoming #mothersonduo #master?❤?? HAPPY EASTER???

A post shared by Mahavadi Pragathi (@pragstrong) on