கனவில் அழகிய பெண்ணை கண்டால் என்ன பலன் தெரியுமா.?

அழகிய பதுமையை(பெண்) கனவில் காண்பது வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்படுவதைக் குறிக்கிறது.

அழகிய பதுமை மங்களப் பொருளுடன் வீட்டிற்குள் நுழைவது வீட்டில் உள்ள பெண் பருவமடைய போகிறாள் அல்லது திருமண முயற்சி கைகூடும் என்பதைக் குறிக்கிறது.

அறிமுகமில்லாதவர்கள் மற்றும் புதிய நபர்களை கனவில் கண்டால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

அயல்நாட்டுத் தூதுவரைக் கனவில் கண்டால் புதிய நபர் ஒருவரின் நட்பு கிடைக்கும்.

அரசனைக் கனவில் கண்டாலும், அரசரோடு நட்பு கொண்டாலும் நல்ல செல்வாக்கும், மதிப்பும், உயர்வும் உண்டாகும்.

அந்தணனைக் கனவில் கண்டால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.

அயல்நாட்டவர் கனவில் தோன்றினால் வணிகத் தொடர்பு உண்டாகும்.

ஆதரவற்ற சிறுவனுக்கு உதவுவது போல் கனவு கண்டால் செல்வந்தரின் நட்பு கிடைக்கும்.

ஆண்கள் சமையல் செய்வது போல் கனவு வந்தால், நீங்கள் வாழ்வில் சுலபமாக பெரும் புகழை எட்டப்போகிறீர்கள் என்று பொருள்.

இரண்டு பேர் சண்டைப்போட்டுக் கொண்டு இருப்பது போல் கனவு கண்டால் உங்கள் குடும்பத்தில் ஒற்றுமை குலையும் என்பதைக் குறிக்கும்.