கொவிட்-19 வைரஸிற்கு எதிராக போராட துப்புரவு பணியாளர்களுக்கு உதவும் ரோபா

தற்போதைய நிலையில் மக்களை பாதுகாப்பதற்காக வைத்தியர்கள், துப்புரவு பணியாளர்கள் போன்றவர்களே அதிகம் போராடிவருகின்றனர்.

நோயாளிகளுக்கு நெருக்கமாக இருந்து இவர்கள் பணியாற்றவேண்டிய நிலை காணப்படுவதனால் இவர்களின் பாதுகாப்பு குறைவாகவே காணப்படுகின்றது.

இதனால் அவர்களுக்கு கொவிட்-19 வைரஸ் தொற்றும் அபாயம் காணப்படுகின்றது.

இதனைக் கருத்தில்கொண்டு துப்புரவு பணியாளர்களுக்கு உதவக்கூடிய அரை தானியங்கி ரோபோக்களை விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.

சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological University (NTU) இல் உருவாக்கப்பட்டுவரும் இந்த ரோபோக்களை பொது இடங்களிலும் பயன்படுத்த முடியும்.

இந்த ரோபோவிற்கு eXtreme Disinfection roBOT (XDBOT) பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் வயர்லெஸ் முறை மூலம் லேப்டொப், டேப்லட் என்பவற்றின் உதவியுடன் இவற்றினை கட்டுப்படுத்தவும் முடியும்.