உலகின் முன்னணி வீடியோ பகிரும் தளமாகத் திகழும் யூடியூப் ஆனது விரைவில் YouTube Chapters எனும் புதிய வசதியினை அறிமுகம் செய்யவுள்ளது.
இவ் வசதியானது நீளமான வீடியோக்களை பார்வையிடும் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது நீண்ட முழு வீடியோக்களையும் பார்வையிட விரும்பாத பயனர்கள் வீடியோவின் விரும்பிய சில பகுதிகளை மாத்திரம் பார்வையிட முடியும்.
இதற்கான Slider உள்ளடக்கப்பட்ட வசதியே YouTube Chapters ஆகும்.
இதற்காக வீடியோக்களில் வழங்கப்பட்டிருக்கும் விளக்கங்களுக்கு (Description) ஏற்பட வீடியோவானது பல்வேறு பகுதிகளாக பிரிக்கப்படும்.
அவ்வாறு பிரிக்கப்பட்ட இடங்களில் குறித்த பகுதிக்கு ஏற்ற விளக்கங்களும் காணப்படும்.
இதனை அடிப்படையாகக் கொண்டு பயனர்கள் விரும்பிய இடங்களில் மாத்திரம் வீடியோவை பார்வையிட முடியும்.