உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவத்தொடங்கியது. தற்போது 200-க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரசால் 2,182,182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வைரசால் 145,521 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இதுவரை 547,293 பேர் குணமடைந்துள்ளனர். சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்கா, இத்தாலியில் தன் கோரத்தாண்டவத்தை ஆடி வருகிறது.
அமெரிக்காவில் இதுவரை 6 லட்சத்து 77 ஆயிரத்து 482 பேருக்கு கொரோனா வைரஸால் பாதித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 29 ஆயிரத்து 482 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் மட்டும் 2165 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்து 608 ஆக அதிகரித்துள்ளது
தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் 6 லட்சத்து 77 ஆயிரத்து 482 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 29 ஆயிரத்து 479 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.