உலகம் முழுவதும் கரோனா வைரஸின் தாக்கமானது பெருமளவு அதிகரித்து வருகிறது. இதனால் உலக நாடுகளில் பெரும்பாலானவை ஊரடங்கை அமல்படுத்தி, கரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
கரோனா வைரஸின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், ஊரடங்கால் கரோனா வைரஸின் பரவலை கட்டுக்குள் வைக்க இயலும் என்ற தகவல் மட்டும் உறுதியானதால், ஊரடங்கின் மூலமாக சமூக தொற்றாக மாறாமல் அரசு தேவையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ஐ.நா பொதுச்செயலாளர் கொரோனா தடக்குபு ஊசியை கண்டுபிடிக்க ஒரு வருடம் ஆகும் என்று கூறியுள்ளார்.
மேலும், கொரோனா வைரஸிற்கு பாதுகாப்பான மற்றும் பயன்பெறும் வகையில் உள்ள தடுப்பூசியை கண்டறிவதே கரோனாவை ஒழித்து மீண்டும் உலக நாடுகளை பயத்தின் அச்சத்தில் இருந்து கொண்டு வர உதவும் என்று தெரிவித்துள்ளார். இதுவே இலட்சக்கணக்கான மக்களையும், பொருளாதாரத்தையும் மீட்க உதவும் என்றும், இந்த தடுப்பூசியை வரும் 2020 ஆம் வருடத்திற்குள் கண்டறிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.