கரோனா வைரஸை கட்டுக்குள் வைக்கும் பொருட்டு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முகக்கவசம், சானிடைசர், அடிக்கடி கை கழுவுதல் போன்ற செயலை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கரோனா பரவலை தடுக்க சானிடைசர் உபயோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், உலகளவில் பாதித்துள்ள கரோனா வைரஸால் கிருமி நாசினிகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கிருமி நாசினியில் 70 விழுக்காடு முதல் 80 விழுக்காடு ஆல்கஹால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சில வகையான கிருமி நாசினியில் 40 விழுக்காடு ஆல்கஹால் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், கிருமி நாசினிக்கு பதிலாக ஆல்கஹாலை ஜப்பான் சுகாதாரத்துறை பயன்படுத்த முடிவு செய்துளளதாக தெரியவருகிறது.
மதுபான வகையில் ஓட்கா என்று அழைக்கப்படும் வகை மதுவை கிருமி நாசினியாக பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கிருமி நாசினி பயன்படுத்தும் வீரியத்தை விட, தனி ஓட்காவிற்கு வீரியம் அதிகம் என்றும், ஓட்காவை தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம் என்றும் ஜப்பான் அரசு அறிவுறுத்தியுள்ளது.