கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுக்க எதிர்பாராதளவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்ட மரணத்தை தழுவியவர்களின் எண்ணிக்கை 1.3 லட்சம்.
சினிமா, டிவி பிரபலங்கள், தன்னார்வலர்கள் என பலரும் மக்களுக்கு தாங்களாகவே முன் வந்து உதவி வருகிறார்கள். அதே வேளையில் அவர் தங்கள் துறை சார்ந்தவர்களுக்கும் தாராளமாக நிதியுதவி அளித்து வருகிறார்கள்.
அண்மையில் நடிகை ஷிகா மல்ஹோத்ரா கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவராக மாறினார்.
இந்நிலையில் மும்பையே சேர்ந்த டிவி நிகழ்ச்சி, சினிமா நடிகர் ஆஷிஷ் கோகலே தற்போது மக்களுக்காக தன் மருத்துவ சேவையை தொடங்கியுள்ளார்.
இந்த புகைப்படங்கள் வெளியானதும் ரசிகர்கள் பொதுமக்கள் என பலர் அவரை வாழ்த்தி வருகிறார்கள்.
பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்தவர் சோனி டிவியின் Tara From Satara நிகழ்ச்சியில் நடித்துள்ளார்.
மேலும் ஜி டிவியின் Kumkum Bhagya நிகழ்ச்சியிலும் நடித்திருந்தார்.
ஆஷிஷ் நடிகர் அக்ஷய் குமாருடன் Gabbar படத்தில் நடித்துள்ளார்.