நடிகை நதியாவின் குடும்ப புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
54 வயது ஆனாலும் இன்னும் கூட மிக இளமையாக தோற்றமளிப்பவர் நடிகை நதியா.
இவரது உண்மையான பெயர் ஸரீனா மொய்டு. கடந்த 1988ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.
பின்னர் கடந்த 2004ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்திருப்பார். அந்த படமே அவருக்கு ரீ என்ரியாக இருந்தது. இது குறித்து அண்மையில் இன்ஸ்டாகிராமில் கூட பதிவிட்டிருந்தார்.
தற்போது பல படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவரின் குடும்ப புகைப்படத்தினை ரசிகர்கள் வைரலாக்கியுள்ளனர். அழகில் அவரின் மகள்கள் நதியாவையே மிஞ்சிவிடுவார்கள் போல இருக்கிறது.