உலகின் பல நாடுகளில் தன்னுடைய கோர்த்தாண்டவத்தை காட்டி வருகிறது கோவிட் 19 என்கிற கொரோனா வைரஸ்.
இந்த வைரஸால் உலகம் முழுவதும் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் கொரோனா வைரஸால் கோமா நிலைக்கு சென்ற கர்ப்பிணி பெண் தான் பெற்ற குழந்தையை குணமடைந்தபின் முதல்முறையாக பார்த்த தருணம் இணையத்தில் வெளியாகி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
லாங் தீவை சேர்ந்த யானிரா சோரியானோ என்ற நிறைமாத கர்ப்பிணி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு கடந்த 3 வாரங்களுக்கு நியூயார்க் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு அறுவை சிகிச்சையின் மூலம் ஆண் குழந்தை பிறந்தது.
ஆனால் யானிரோ கோமா நிலைக்கு சென்றார். இதனால் அவருக்கு கடந்த 2 வாரங்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது பூரண குணமடைந்த அவர் மருத்துவமனையில் இருந்து சக்கர நாற்காலி மூலம் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது தான் பெற்றெடுத்த குழந்தையை முதல்முறையாக கண்ணீர் மல்க பார்த்து கொஞ்சி மகிழ்ந்தார். குறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.