கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் உலக நாடுகளை ஒரு இக்கட்டான நிலைக்கு கொண்டு போய் தள்ளிவிட்டது. இந்த பாதிப்பால் லட்சக்கணக்கானோர் இறந்துள்ளனர்.
ஹாலிவுட் சினிமா பிரபலங்கள் சிலர் இந்நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். அத்திரையுலகில் புகழ் பெற்ற ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் Allen Daviau.
பிரபல இயக்குனரான ஸ்டீவன் ஸ்பில்ஸ் பெர்க் உடன் பணியாற்றியுள்ளார். E.T, The Color Purple, Empire of the Sun என்ற படங்களில் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த Allen Daviau இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
Avalon, Bugsy ஆகிய படங்களுக்காக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். Allen Daviau க்கு வயது 77.
இந்நிலையில் அவரின் மரணம் பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.