இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும்
கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் சமூக தொற்றாக மாறாமல் இருக்க அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
இதனால் கொரோனா வைரஸ் சமூக தொற்றாக மாறாமல் இருக்கும் நிலையில், மேலும் வைரஸ் பரவாமல் இருக்கவும் அதிதீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாட்டின் பொருளாதாரம், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் என்று சகலமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் மக்களின் உயிரை கருத்தில் கொண்டு ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் 13 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 13,835 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1766 பேர் பூரண நலன் பெற்று இல்லங்களுக்கு திரும்பியுள்ளனர்.