இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால் யாழ். மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கான கிருமி தொற்று நீக்கும் மருந்துகள் விசிறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு அங்கமாக இன்று அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தொற்றுக்களை நீக்கும் மருந்துகள் விசிறப்பட்டன.
இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் பல்வேறு பொது இடங்களில் மருந்து விசிறும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதனையடுத்து பொது இடங்கள், வர்த்தக நிலையங்கள் என்பவற்றிற்கும் மருந்துகளை விசிறும் பணி முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.