முதன்முறையாக வெளியிட்ட நதியாவின் மகள் புகைப்படம்!

80களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தார் நதியா. அதன் பிறகு அக்கா, அம்மா என பல விதமான குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

இதுநாள் வரை சமூக வலைத்தளங்களில் இருந்து ஒதுங்கியே இருந்த நதியா சமீபத்தில் தான் இன்ஸ்டாகிராமில் இணைந்தார். அதில் அவர் இதுவரை ரசிகர்கள் யாரும் பார்த்திடாத பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சென்ற வருடம் குடும்பத்தினருடன் ஜப்பான் சென்ற போது எடுத்த சில புகைப்படங்களை வெளியிட்டுளளார் அவர். அதில் அவரது மகள்களும் உள்ளனர். சனம், ஜானா என்ற அவரது இரு மகள்கள் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்ட்.

நடிகை நதியா தனது மகள்களை வெளிக்காட்டாமல் இருந்த நிலையில், அவருக்கு இவ்வளவு பெரிய மகள்கள் இருக்கிறார்களா என பலரும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்

மேலும் நதியா வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து மகள்கள் இவரது தங்கைகள் போல இருக்கிறார்கள் என்று கூறி வருகின்றனர். 53 வயதாகும் நதியா தற்போதும் இளமையாக தோற்றமளிப்பதை தான் இப்படி பாராட்டியுள்ளனர்.

நதியாவுக்கு 1988ல் திருமணம் நடைபெற்றது. நான் என் கணவருக்கு ப்ரோபோஸ் செய்தபோது அவர் அதை ஏற்றுக்கொண்டது தான் என் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான தருணம் என நதியா பேட்டியில் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.