ஊரடங்கில் வீட்டு வாசலுக்கு வந்து சர்ப்ரைஸ் கொடுத்த பொலிசார்…. நீங்களே காணொளியைப் பாருங்க

இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் தனது குழந்தையின் முதல் பிறந்தநாளைக் கொண்டாட முடியாமல் இருந்த பெற்றோர், பொலிசாரின் உதவியுடன் கொண்டாடியுள்ளனர்.

இந்தியா முழுவதும் லாக்டவுன் என்பதால் பலரும் தங்களது கொண்டாட்டங்களை ஒதுக்கிவிட்டு உயிரைக்காப்பாற்றிக்கொள்வதற்கு வீடுகளில் முடங்கி காணப்படுகின்றனர்.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் தனது குழந்தையின் முதல் பிறந்தநாளைக் கொண்டாட நினைத்த பெற்றோர் பொலிசாருக்கு தகவல் கொடுத்து அவர்கள் உதவியுடன் கேக் வாங்கி பிறந்தநாள் கொண்டாடியுள்ள காட்சியே இதுவாகும்.