2020 ஆஸ்கர் வென்ற ‘Joker’ படம் தமிழ் படத்தில் இருந்து காப்பியா?

சென்ற வருடம் ஹாலிவுட் திரையுலகில் Joaquin Phoenix நடிப்பில் Todd Phillips என்பவரின் இயக்கத்தில் வெளிவந்து மிக பெரிய வெற்றியடைந்த படம் ஜோக்கர்.

இப்படம் இந்த வருடம் நடந்து முடிந்த 2020 ஆஸ்கரில் ரசிகர்களின் பேர் ஆதரவினால் பல விருதுகளை அள்ளியது.

இப்படத்தில் நடித்திருந்த நடிகர் Joaquin Phoenix என்பவரின் நடிப்பு மக்கள் மத்தியில் பெரிதளவில் பேசப்பட்டது.

இந்நிலையில் தமிழில் வழக்கு என் 18 கீழ் 9, சாமுராய் போன்ற படங்களை இயக்கி இயக்குனர் திரு பாலாஜி சக்திவேல்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது திரையுலக பயணத்தின் பல நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார்.

அதில் ஒன்றாக “நான் ஜோக்கர் படம் பார்த்தேன் அதில் வரும் Joaquin Phoenix நடிகரின் கதாபாத்திரத்தை பல வருடங்களுக்கு முன்பே நமது கமல் ஹாசன் இதே சாயலில் ஆளவந்தான் எனும் படத்தில் இந்த கதாபத்திரத்தை செய்துள்ளாரே, என்று நினைத்து பாரும் போது கமலின் மேல் இன்னும் மரியாதை கூடியது” என்று கூறினார்.