கொரோனா வைரஸ் தொற்றினை உறுதி செய்வதற்கு பல நாடுகள் சிரமப்பட்டு வருகின்றன.
குறைந்தளவு சாதனங்களும், அதிகளவான மக்களும் காணப்படுகின்றமையே இதற்கு பிரதான காரணமாகும்.
தவிர விரைவாக பரிசோதனை செய்யக்கூடிய சாதனங்களும் இல்லாமல் காணப்பட்டது.
இப்படியான நிலையில் தற்போது கேரளாவில் உள்ள Sree Chitra Tirunal Institute for Medical Sciences and Technology (SCTIMST) நிறுவனம் புதிய சாதனம் ஒன்றினை உருவாக்கியுள்ளனர்.
Chitra Gene LAMP-N எனும் குறித்த சாதனமானது குறைந்த செலவில் உருவாக்கப்பட்டுள்ளதுடன், மிக வேகமாக கொரோனா வைரஸ் தொற்றினை கண்டறியக்கூடியதாகவும் இருக்கின்றது.
தவிர இச் சாதனமானது 100 சதவீதம் சரியாக செயற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.