உலகில் அதிகளவானவர்கள் பயன்படுத்தும் இணைய உலாவிகளில் ஒன்றாக மொஸில்லா ஃபயர்பாக்ஸ் காணப்படுகின்றது.
இப்படியிருக்கையில் இவ் உலாவியின் ஊடாக தொலை அணுகல் முறையில் ஹேக்கிங் இடம்பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி இதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கு உடனடியாக குறித்த உலாவியனை அப்டேட் செய்யுமாறும் அறிவுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிவுத்தலை Indian Computer Emergency Response Team (CERT-In) வெளியிட்டுள்ளது.
மொஸில்லா நிறுவனமானது இறுதியாக 75 வது பதிப்பினை வெளியிட்டுள்ளது.
குறித்த பதிப்பினை அப்டேட் செய்துகொள்வதன் மூலம் ஹேக்கர்களிடமிருந்து பயனர்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.