ஆப்பிள் நிறுவனத்தின் கைப்பேசிகள் பொதுவாக விலையுயர்ந்தவையாகும்.
இதனைக் கருத்திற்கொண்டு சாதாரண மக்களும் கொள்வனவு செய்யக்கூடிய வகையில் iPhone SE எனும் கைப்பேசியினை சில வருடங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்திருந்தது.
எதிர்பார்த்ததைப் போலவே குறித்த கைப்பேசி பலத்த வரவேற்பினைப் பெற்றிருந்தது.
இந்நிலையில் இவ்வருடம் குறித்த கைப்பேசியின் புதிய மொடல் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இப்படியிருக்கையில் நேற்றைய தினம் குறித்த கைப்பேசி தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதன்படி 4.7 அங்குல அளவு, 1334 x 750 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், பிரதான நினைவகமாக 3GB RAM, 64GB, 128GB மற்றும் 256GB ஆகிய வெவ்வேறுபட்ட சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
தவிர 399 டொலர்கள் பெறுமதியாக இக் கைப்பேசியில் 7 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 12 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 1,821 mAh மின்கலம் என்பனவும் தரப்பட்டுள்ளன.